தமிழ்நாடு
பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!!
திருச்சுழி அருகே பாண்டியர் கால கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இக்கல்வெட்டில் எழுதியதைக் கொண்டு, இக்கல்வெட்டு கி.பி 10 அல்லது 11ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பாண்டியர் காலத்தை சேர்ந்தது என தெரிய வருகிறது.
அறிவியல் தொழில்நுட்பம்
அண்டார்டிகாவிலும் நுழைந்த எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை!!
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவையை உலகின் பல நாடுகளில் வழங்கி வருகிறது.உலகின் 7 கண்டங்களில் அண்டார்டிகாவில் மட்டும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழி இணைய சேவை இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் ஸ்டார்லிங்க் சேவை அண்டார்டிகாவிற்கும் தற்போது சென்று அடைந்துள்ளது.
இது குறித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், “ஸ்டார்லிங்க் இப்போது அண்டார்டிகா உட்பட அனைத்து கண்டங்களிலும் செயலில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செல்போன் திருட்டை தடுக்க செயலி அறிமுகம்பெங்களூருவில் செல்போன்கள் திருட்டை தடுக்க பெங்களூரு போலீசாரால் சி.இ.ஐ.ஆர். என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
செல்போன்கள் திருடப்பட்ட பின்னர் இந்த சி.இ.ஐ.ஆர். செயலிக்குள் சென்று செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை கொடுத்தால் சிறிது நேரத்தில் திருடப்பட்ட செல்போனின் செயல்பாடு முடங்கி விடும்.
டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் இந்த செயலி பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
மராட்டியத்தில் நிதி ஆயோக் முறையில் ஒரு நிறுவனம்!!
பல்வேறு துறைகளில் ஆய்வு முடிவுகளை எடுப்பதற்காக மராட்டியத்தில் நிதி ஆயோக் முறையில் ஒரு நிறுவனம் அமைக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார
முக்கிய தினம் / வாரங்கள்
உலக மூங்கில் தினம் – செப்டம்பர் 18உலக மூங்கில் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 18 – ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது.
மூங்கிலை பாதுகாக்கவும், மூங்கில் தொழிலை ஊக்குவிக்கவும் உலக மூங்கில் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியா
தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம்!!
குஜராத்தில் உள்ள லோத்தல் என்ற வரலாற்று சிறப்புமிக்க சிந்து சமவெளி நாகரிகப் பகுதியில் இது நிறுவப்பட உள்ளது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சகம் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை கட்டமைத்து வருகிறது.
நியமனங்கள்
ஏசிசியின் தலைவராக கரண் அதானி நியமனம்!!
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான கௌதம் அதானியின் மகன் கரண் அதானி, ஏசிசி லிமிடெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்பொழுது கரண் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் தலைமை நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார்.
தமிழ்நாடு
திருச்சியில் பெரியார் உலகம்: அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!!
இன்று பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் பெரியார் உலகம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்தில் பெரியார் நூலகம், ஆய்வகம் போன்றவை அமைக்கப்பட உள்ளன.
உலகம்
எஸ் சி ஓ மாநாட்டில் தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா!!!
இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ் குடியரசு ஆகிய நாடுகளை கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாடு உஸ்பெகிஸ்தானின் சாமர்கன்ட் நகரில் நடைபெற்றது.
2022 க்கான தலைமை பொறுப்பை உஸ்பெகிஸ்தான் வகித்த நிலையில் 2023 -ம் ஆண்டிற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது. இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டுக்கான எஸ் சி ஓ மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது.
சர்வதேச கடலோர தூய்மை தினம் – செப்டம்பர் 17
சர்வதேச கடலோர தூய்மை தினம் செப்டம்பர் 17 அன்று அனுசரிக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கடலோர சுத்தப்படுத்தும் தினத்தின் கருப்பொருள் “குப்பை இல்லாத கடல்களுக்காக போராடுதல்” என்பதாகும்.
முக்கிய தினம் / வாரங்கள்
உலக நோயாளி பாதுகாப்பு தினம் – செப்டம்பர் 17
உலகளாவிய ரீதியில் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், தனிநபர்கள் சுகாதாரப் பாதுகாப்பை பராமரிப்பதை ஊக்குவிப்பதற்காகவும் உலக நோயாளி பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
WHO மற்றும் அதன் சர்வதேச கூட்டமைப்புகளால் இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
நியமனங்கள்
நெதர்லாந்து நாட்டுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்
நெதர்லாந்து நாட்டுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷெபாலி ரஸ்தான் துக்கால் (வயது 50) என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான முறையான ஒப்புதலை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை வழங்கி விட்டது.
காஷ்மீரி பண்டிட் இனத்தை சேர்ந்த இவர் இந்தியாவில் இன்றைய உத்தரகாட் மாநிலத்தின் ஹரித்துவாரில் பிறந்தவர்.
மியாமி பல்கலைக்கழகத்தில் பட்டமும், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றவர்.