தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான அறிவிப்புகள்
1) தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்படும். இதற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2)முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவாக்கம செய்யப்படுகிறது. இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது
3)முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 521 கோடி மதிப்பில் தேனாம்பேட்டை முதல் அண்ணாசாலை வரை நான்கு வழி சாலை மேம்பாலம் கட்டப்படும். இதன்மூலம் சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
4)சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் நீர்வழிகள் தூய்மைப்படுத்தும் திட்டத்தில் சென்னையின் முக்கிய ஆறுகளாகத் திகழும் அடையார் மற்றும் கூவம் ஆறுகளை மேம்படுத்த ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு.
5)கோவையில் ரூ.172 கோடி செலவில் இரண்டு கட்டங்களாக செம்மொழி பூங்கா அமைக்கப்படும்.
6)சேலத்தில் ரூ.880 கோடி மதிப்பீட்டில் 119 ஏக்கரில் புதிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும். ஜவுளி பூங்கா அமைக்கப்படுவது மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
7)மரக்காணத்தில் சர்வதேச பறவைகள் மையம் அமைக்கப்படும்
8)மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர நிதியுதவி ரூ.1500ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.